கொரோனா கட்டுக்குள் வந்ததும் திரையரங்குகள் திறப்பு பற்றி முடிவு: அமைச்சர் கடம்பூர்ராஜூ பேட்டி

கோவில்பட்டி: கொரோனா தொற்று முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பின்னர் திரையரங்குகள் திறப்பது குறித்து தமிழக முதல்வர் முடிவு எடுப்பார் என அமைச்சர் கடம்பூர்ராஜூ தெரிவித்தார். இதுகுறித்து கோவில்பட்டியில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:   சினிமா தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், நடிகர் சங்க பிரதிநிதிகள் ஒருங்கிணைந்து பேசுவதற்கு ஏற்பாடு செய்தால் அதற்கு அரசு உதவும்.

இந்தியாவில் அனை த்து மாநிலங்களிலும் கொரோனா ஊரடங்கால் வழிபாட்டு தலங்கள், மால்கள், விடுதிகள், திருமண மண்டபங்கள், திரையங்குகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா தொற்று முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதும் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி இவைகளை திறப்பது குறித்து தமிழக முதல்வர் தக்க நேரத்தில் முடிவுகளை அறிவிப்பார். இவ்வாறு அமைச்சர் கடம்பூர்ராஜூ தெரிவித்தார்.

Related Stories: