மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் அசோக் சவானுக்கு கொரோனா

நாண்டெட்: மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும் தற்போதைய அமைச்சருமான அசோக் சவான் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அசோக் சவானின் கார் டிரைவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, அசோக் சவான் நாண்டெட்டில் உள்ள தனது வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இந்த நிலையில், அசோக் சவானுக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று முன்தினம் மாலை உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் நாண்டெட் நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் டாக்டர்கள் கூறியுள்ளனர்.

Related Stories: