மேட்டுப்பாளையம் அருகே வனத்துறை அமைத்த தொட்டியில் தண்ணீர் குடித்து தாகம் தீர்க்கும் விலங்குகள்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே வனத்துறையினர் அமைத்த தொட்டியில் தண்ணீர் குடித்து வன விலங்குகள் தாகம் தீர்த்து செல்கின்றன.  மேட்டுப்பாளையம்,சிறுமுகை, காரமடை உள்ளிட்ட வனப்பகுதிகளில் யானை, மான், காட்டு மாடு உள்ளிட்ட வனவிலங்குகள் வசிக்கின்றன. கோடை காலத்தில் நீராதாரங்கள் வறண்டு போகும் என்பதால் இவ்வனப்பகுதிகளில் வனத்துறையினர் ஏராளமான செயற்கை தொட்டிகளை அமைத்து தண்ணீர் நிரப்பி வருகின்றனர்.   இந்த நிலையில் மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலை ஓடந்துறையில் உள்ள வனத்துறை மர கிடங்கு வளாகத்தில் வனவிலங்குகள் தண்ணீர் குடித்து செல்வதற்காக வனத்துறை சார்பில் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டு கடந்த 10 ஆண்டாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

இத்தொட்டியில் வனத்துறையினர் அடிக்கடி தண்ணீர் நிரப்பி வருகின்றனர். இத்தொட்டிக்கு வரும் வனவிலங்குகள் தண்ணீர் குடித்து தாகத்தை தீர்த்துக் கொள்கின்றன. பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இப்பகுதிக்கு கூட்டமாக வரும் யானைகள் தொட்டி தண்ணீரை துதிக்கையால் எடுத்து தன் உடல் மீது வீசி வெப்பத்தை தணிக்கின்றன. வனத்துறையினர் தண்ணீர் தொட்டிகளை தினமும் பராமரித்து தண்ணீர் நிரப்புகின்றனர். தண்ணீர் குடிக்க வரும் வனவிலங்குகளை கண்காணித்தும் வருகிறார்கள்.

Related Stories: