2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

பெரம்பூர்: கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மீனாம்பாள் சாலை தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை சந்திப்பு பகுதியில் கொடுங்கையூர் போலீசார் நேற்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது, அங்கு வந்த மினி லோடு வேனில் ரேஷன் அரிசி சுமார் 2 டன் இருப்பதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து, வேன் ஓட்டுநரான பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த மோகன் (39) என்பரை கைது செய்து, வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.  மேலும், பறிமுதல் செய்த அரிசி மூட்டைகளை குடியுரிமை பொருள் குற்ற புலனாய்வு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Related Stories:

>