மயிலாடுதுறை சோதனை சாவடியில் மூட்டை மூட்டையாக போதை பொருள் பறிமுதல்: மதுரையிலிருந்து வந்தபோது போலீசார் மடக்கினர்

மயிலாடுதுறை :மயிலாடுதுறை சோதனை சாவடியில், மதுரையில் இருந்து கொண்டு வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மயிலாடுதுறை அருகே திருவாலங்காடு சோதனைச் சாவடியில் மணல்மேடு போலீசார் பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று விடியற்காலை மயிலாடுதுறையை நோக்கி, ‘காய்கறி, அவசரம்’ என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வேகமாக வந்த சரக்கு லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில், அந்த லாரியில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருளான 60 மூடைகளில் 1,80,000 ஹான்ஸ் பாக்கெட்கள் பதுக்கி வைத்து கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, லாரி ஓட்டுநர் மதுரை மேலூரை சேர்ந்த பூரணஜோதி (32) என்பவரை கைது செய்து, ஹான்ஸ் மூட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி ஆகியவற்றை குத்தாலம் போலீசில் ஒப்படைத்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் லாரியின் மொத்த மதிப்பு சுமார் 1 கோடி ஆகும். மதுரை மொத்த வியாபாரி, மயிலாடுதுறை நகரில் பல கடைகளில் மொத்த வியாபாரம் செய்துவரும் வியாபாரி மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடிவருகின்றனர். மதுரையில் தன்னை அழைத்த நபர் சரக்கை ஏற்றிவிட்டு மயலாடுதுறை செல்லவேண்டும் என்று அங்கே சென்றபிறகு ஒரு செல்போன் எண்ணை தொடர்புகொண்டால் அவர்கள் அதை இறக்கிக்கொள்வார்கள் என்று கூறியதாக ஓட்டுனர் பூரணஜோதி கூறினார். இதையடுத்து பூரணஜோதியை கைது செய்த போலீசார், மதுரையை சேர்ந்த கார்த்திக் தீபக், மயிலாடுதுறையை சேர்ந்த டீலர் ஆனந்த், மயிலாடுதுறை மங்கிலால் சேட்டு மேலும் 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

Related Stories: