ஒவ்வொரு மனித நினைவிலும் நீங்கா இடம் பிடித்த கொரோனாவின் ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி எப்போது!! ரத்த கண்ணீருடன் காத்திருக்கும் மனித குலம்

*2019-ம் ஆண்டின் ஆயுள் முடிய ஒரு மாதமே இருந்த நிலையில், சீனாவின் வுகான் நகரத்தில் இருந்து தனது பேரளவு பயணத்தை அமைதியாக தொடங்கியது அபாயகரமான கொரோனா வைரஸ்.

*பிறப்பிடம் சீனா என்றாலும் பாரபட்சம் பார்க்காமல் உலக பந்தில் உள்ள 210 தேசங்கள் மீது ஆயுதங்களே இல்லாமல் போர் தொடுத்தது covid-19 என்று பெயர் சூட்டப்பட்ட கொரோனா நச்சுக்கிருமி.

*2,75,000 உயிர்களை பறிகொடுத்த பின் உஷாரான உலக நாடுகள் கண்ணனுக்கு தெரியாத கொரோனா மீது பதில் தாக்குதல் நடத்தும் நடவடிக்கையில் இறங்கின.

*முக்கிய சர்வதேச ஆய்வு நிறுவனங்களும், பல்கலைக்கழகங்களும், ஆராய்ச்சியாளர்களும், விஞ்ஞானிகளும், தடுப்பு மருந்து தயாரிப்பில் அடுத்தடுத்து குதித்தனர். அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி அபரிவிதமாக இருந்ததால் தான் நாம் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முயற்சிகளை எடுக்கிறோம்.

*இதுவரை ஏற்பட்ட நோய் தொற்றுகளை விட கொரோனா தொற்றை கண்டறிவதில் உலகம் முழுவதும் ஓரளவு விழிப்புணர்வு ஏற்பட்டதற்கு முக்கிய காரணம் அறிவியல் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி.

*ஒரு அபாயகரமான கிருமி தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டறிவது அவ்வளவு சுலபம் இல்லை. வைரஸ் ஒரே மாதிரியான தாக்கத்தை பல நாடுகளில் ஏற்படுத்துகிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும். அதனால் தடுப்பு மருந்தை ரெடிமேடாக தயாரித்து அளித்து விட முடியாது. சோதனை செய்ய கால அவகாசம் தேவை.

*கொரோனாவுக்கு முன்னர் ஏற்பட்ட சார்ஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் நேரத்தில் அந்த கிருமி முழுமையாக குறைந்து விட்டது. இதனால் தடுப்பு மருந்து தயாரிப்பு பணிகள் பாதியிலேயே நின்று விட்டன.

*எனவே வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது அதிக செலவு பிடிக்கும் செயல் மட்டும் அல்ல. எல்லா நேரத்திலும் இதனை பயன்படுத்த முடியுமா? என்ற துணைக்கேள்வியும் உள்ளடக்கியது.

*ஆனால் கொரோனாவை பொறுத்தவரை உலக நாடுகள் பலவும், முன்கூட்டியே செயல்பட தொடங்கிவிட்டன. எந்தெந்த நாடுகள் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு போரில் குதித்திருக்கின்றன என்று பார்ப்பதற்கு முன்பு எதன் அடிப்படையில் எத்தனை கட்டங்களாக கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து தயாரிக்கப்படுகிறது என்பதை அறிந்து கொள்வது சிறப்பு.

*கொலை கரங்களால் நாடுகளை இருக்கி வரும் கொரோனா கிருமி சாதாரண சளியை ஏற்படுத்தும் வைரஸின் குடும்பத்தைச் சேர்ந்த புதிய உறுப்பினர் தான். சார்ஸ், மெர்ஸ் வைரஸ்களும் கூட கொரோனாவுக்கு நெருங்கிய உறவினர்கள் தான். கொரோனா வைரஸ் RNA virus ஆகும்.

*தனது இயல்புகளை சூழலுக்கு தக்கவாறு மாற்றிக் கொள்ளக்கூடிய தன்மை படைத்தவை தான் RNA வகை கிருமிகள். இதனால் தான் பாஸ்போர்ட், விசா, இல்லாமல் எத்தனை நாடுகளுக்கு சென்றாலும் கொரோனா வைரசால் அந்த குறிப்பிட்ட நாட்டின் சூழலுக்கும், கால நிலைக்கும் ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொள்ள முடிகிறது.

*இதனால் உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா அரக்கனை அழித்துவிட உலக நாடுகள் பலவும் வைரஸ் தடுப்பு மருந்து தயாரிப்பு பணிகளை முடுக்கி விட்டிருக்கின்றன. இதில் சில வெற்றியும் பெற்றிருக்கின்றன.  இனி வைரஸ் தடுப்பு மருந்து எத்தனை கட்டங்களை தாண்டி இறுதி வடிவம் பெரும் என்பதை பார்க்கலாம்.

*பொதுவாக மருத்துவ பரிசோதனைகள் 3 கட்டங்களாக நடைபெறும். வைரஸை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டறியப்பட்டால் முதலில் எலி, முயல் உள்ளிட்ட விலங்குகள் உடலில் செலுத்தி சோதனை செய்ய வேண்டும் என்பது விதி. இந்த அடிப்படை பரிசோதனை சாதகமான முடிவை தந்தாள் மட்டுமே தடுப்பு மருந்து சோதனை அடுத்த கட்டத்துக்கு செல்லும்.

*பாதுகாப்பினை பல முறை உறுதி செய்து கொண்ட பிறகு மனிதர்களிடம் இரண்டாம் கட்ட சோதனை செய்யப்படும். அதாவது முதலில் 5 முதல் 10 தன்னாலர்வர்கள் உடலில் தடுப்பு மருந்தினை செலுத்தி விளைவுகள் பதிவு செய்யப்படும். ஆய்வு முடிவுகள் நல்ல பலனை தந்தாள் 50 முதல் 100 பேருக்கு மீண்டும் செலுத்தப்பட்டு வைரசுக்கு எதிராக தடுப்பு மருந்து எவ்வாறு போராடுகிறது என்பது ஆய்விடப்படும்.

*இந்த முடிவுகள் நல்ல பலனை தந்தாலும் இறுதி கட்டமாக பல்வேறு நாடுகளில் பல விதமான சூழல்களில் வாழும் சமூகத்தை சேர்ந்த 1000 மனிதர்களிடம் சோதனை செய்து பார்க்கபப்டும் இதுதான் மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட சோதனை. இத்தனை கட்டங்களை கடந்து ஆய்வாளர்கள் விஞ்ஞானிகள் மருத்துவ நிபுணர்களின் ஒப்புதலை பெற்ற பின்னர் தான் வணிக ரீதியில் கொரோனா தடுப்பு மருந்து கடைகளுக்கு வரும்.

*இந்தியா, இஸ்ரேல், இத்தாலி, சீனா,அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் போட்ட போட்டிபோட்டு கொண்டு  கொரோனா வைரசை களையெடுக்கும் தடுப்பு மருந்து, சிகிச்சை முறைகள் கண்டுபிடிப்பதில் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன.

*கொரோனாவை வெல்லும் வழிக்காகவே ஒவ்வொரு மனிதர்களும் தற்போது எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறார்கள். ஒட்டு மொத்தமாக மனித குலத்தையே கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருவதால் ஒவ்வொரு குடிமக்களின் மனதிலும் நீங்கா இடம் பெற்றுள்ளது என்றால் அது மிகையாகாது.

Related Stories: