கொரோனாவுக்கு தடுப்பு மருந்து ஆயுர்வேத மருந்து பயன்பாடு குறித்த ஆய்வுகள் தொடங்கியது: அமைச்சர் ஹர்ஷ வர்தன் தகவல்

புதுடெல்லி: கொரோனாவுக்கு தடுப்பு மருந்தாக ஆயுர்வேத மருந்துகளை பயன்படுத்துவது தொடர்பான பரிசோதனை நடந்து வருகிறது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.  மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: கொரோனாவுக்கு தடுப்பு மருந்தாக ஆயுர்வேத மருந்துகளை பயன்படுத்துவது தொடர்பான பரிசோதனை முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன.  அதிமதுரம், சீந்தில் இலை, அமுக்கிரா, ப‍ப்பாளி உள்ளிட்ட ஆயுர்வேத மருந்துகளை பயன்படுத்து குறித்து ஆராயப்படுகிறது. இவை முதலில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் சுகாதாரப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்படும் மருந்துகளுடன் சேர்த்து அளிக்கப்பட உள்ளது.

இதற்கான பரிசோதனைகள் இன்று (நேற்று) தொடங்கப்பட்டுள்ளன. அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி அமைப்பின் தொழில்நுட்ப உதவியுடன் ஆயுஷ் மற்றும் சுகாதார அமைச்சகம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் இணைந்து இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார். கங்கை நீர்

மருந்தாகுமா? கங்கை நீரை கொரோனா தொற்றுக்கு மருந்தாக பயன்படுத்துவது குறித்த திட்டம், ஜல்சக்தி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கங்கை தூய்மை பணிக்குழுவின் மூலம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு கடந்த 28ம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது. இதனை ஆராய்ந்த ஐசிஎம்ஆரின் ஆராய்ச்சி திட்டம் மற்றும் மதிப்பீட்டு குழுவின் தலைவர் டாக்டர் குப்தா கூறுகையில், கங்கை ந‍தியில் நோய் பரப்பும் கிருமிகளை விட நிஞ்சா வைரஸ் கிருமிகள் அதிகளவில் இருப்பதாகவும் எனவே கங்கை நீரை கொரோனா தடுப்பு மருந்தாக பயன்படுத்தும் திட்டத்தை தற்போது செயல்படுத்த முடியாது’’ என்றும் தெரிவித்துள்ளார்.

Related Stories: