கோவையில் சலூன் கடைகளில் பாதுகாப்பு உடையணிந்து முடி திருத்தும் தொழிலாளர்கள்

கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக சலூன் கடைகள் காலை 7 மணி முதல் 10 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கொரோனா அச்சம் காரணமாக பொதுமக்கள் சலூன் கடைகளுக்கு சென்று முடிவெட்ட தயக்கம் காட்டி வருகின்றனர். இந்நிலையில்,  கோவை மாவட்ட மருத்துவர் சவரத் தொழிலாளர் நலச்சங்கத்தின் சார்பில் கோவை சேரன் மாநகர், தண்ணீர் பந்தல் உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் 40 சலூன்  கடைகளுக்கு முழு கவச உடை வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா முன்னெச்சரிக்கை  நடவடிக்கையாக பாதுகாப்பு உடைகள் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் ராமகிருஷ்ணன், செயலாளர் சண்முகம், பொருளாளர் சரவணன் ஆகியோர் தெரிவித்தனர். மேலும், இந்த சலூன் கடைகளில் முடி மட்டுமே வெட்டப்படுகிறது. சேவிங் செய்யப்படுவதில்லை. அரசின் விதிமுறைகளை பின்பற்றி  சலூன் கடைகள் நடத்தப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர். 

Related Stories: