கிளிகளை பேச வைத்து ‘டிக் டாக்’ பள்ளி மாணவனுக்கு அபராதம்: வனத்துறை நடவடிக்கை

பெருந்துறை: ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதிக்குட்பட்ட சின்ன வீர சங்கிலி கிராமத்தை சேர்ந்தவர் சேர்ந்த பள்ளி மாணவன் கதிர்வேல் (17), சீனாபுரத்திலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் தனது தோட்டத்தின்  மரங்களில் இருந்த பச்சை கிளிகளை பிடித்து வந்து வளர்த்து வந்ததுடன், அந்த கிளிகளுக்கு பேச்சுப் பயிற்சி அளித்து, அது பேசுவதை டிக் - டாக் ஆப்பில் பதிவிட்டார். கிளி பேசுவது வைரலானது, இதை பார்த்த பலர் கிளிகளை துன்புறுத்துவதாக மாவட்ட வன அலுவலருக்கு புகார் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து கதிர்வேலின் டிக் - டாக் பதிவினை ஈரோடு வனசரக அலுவலர் ரவீந்திரநாத் தலைமையிலான வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

புகார் உறுதியானது. பின்னர், கதிர்வேல் மீது வனப் பாதுகாப்புச் சட்டத்தின்படி குற்ற வழக்கு பதிவு செய்து, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என அறிவுரை கூறினர். இனிமேல் கிளிகள் உள்ளிட்ட எந்த  வன விலங்குகளுக்கும்  தீங்கு இழைக்க மாட்டேன் என டிக்டாக்கில் பதிவிட வேண்டும் என வன அலுவலர்கள் கூறினர். அதைத்தொடர்ந்து, கதிர்வேல், டிக்டாக்கில் ‘வன விலங்குகளை துன்புறுத்த மாட்டேன், வன உயிரினங்களுக்கு பாதுகாப்பாக இருப்பேன்.  என்னைப்போல் யாரும் தவறு செய்யக்கூடாது’ என்று வெளியிட்டுள்ளார்.

Related Stories: