இயக்குனர் ஆன மாஸ்டர் அஸ்வந்த்

சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதியின் மகனாக நடித்தவர் சிறுவன் அஸ்வந்த். தற்போது கொரோனா லாக்டவுன் என்பதால் அஸ்வந்த் மற்றவர்களைப் போலவே தனது வீட்டில் தான் இருக்கிறார். இந்த நேரத்தை வீணாக்காமல் அவர் ஒண்டிப்புலி என்கிற கதையை எழுதியுள்ளார். அதற்கு தானே குரல் கொடுத்து தன்னிடம் இருக்கும் பொம்மைகளை வைத்து கதையை சொல்வதை விடியோவாக எடுத்துள்ளார். தற்போது வரை இரண்டு எபிசோடுகள் தனது யூடியூபி சேனலில் வெளியிட்டுள்ளார். அஸ்வத்தின் இந்த முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Related Stories: