வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை: தலைமை நீதிபதிக்கு பார்கவுன்சில் கோரிக்கை

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் கடந்த மார்ச் 25 முதல் செயல்படவில்லை. தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் மே மாதம் அறிவிக்கப்பட்டிருந்த கோடை விடுமுறை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பல நடைமுறை சிக்கல்கள் ஏற்படும். கொரோனா முற்றிலும் தடுக்கப்படாத நிலையில், கீழமை நீதிமன்றங்களில் விசாரணை நடத்தப்பட்டால் பாதுகாப்பாக இருக்காது.

எனவே, பாதுகாப்பான முறையில் நீதிமன்றத்தை நடத்த போதிய வசதிகள் இல்லாத கீழமை நீதிமன்றங்களில் காணொலி காட்சி மூலமாக மட்டுமே வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தமிழக மற்றும் புதுவை அரசுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: