வெளிமாநில தொழிலாளர்களுக்கு கட்டுப்பாட்டு அறை அமைக்க வேண்டும்: மக்களவை சபாநாயகர் கோரிக்கை

புதுடெல்லி: மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா நேற்று பல்வேறு மாநில சட்டப்பேரவை சபாநாயகர்களுடன் ஆன்லைன் மூலம் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: 27 மாநில சட்டப்பேரவை சபாநாயகர்கள் மற்றும் மேல்சபை தலைவர் ஒருவருடன் ஆன்லைன் மூலம் ஆலோசனை நடத்தியுள்ளேன். அப்போது கொரோனாவால் அனைத்து மாநிலங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஒருமித்த குரலில் கூறியுள்ளனர்.

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களில் சிக்கி தவிக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் சிக்கி தவிக்கும் மாணவர்களுக்கு உதவும் வகையில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள சட்டப்பேரவைகளில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட வேண்டும். மேலும் சட்டப்பேரவைகளும், நாடாளுன்றமும் பைல்களுக்கு பதிலாக டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். இதுதவிர எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் இடையே கொரோனா தொடர்பாக பரிமாற்றங்கள் மேற்கொள்ள நாடாளுமன்றத்திலும் கட்டுப்பாட்டு அறை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: