வைரஸ் பாதித்த மக்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் கொரோனாவை வென்ற 101 வயது மூதாட்டிகள்!!

ஸ்பெயின் : ஸ்பெயினில் கொரோனாவிலிருந்து குணமடைந்த 101 வயது மூதாட்டி, கொரோனா பாதித்த மக்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமானார். உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனாவால் இதுவரை 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 54,000 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா, இத்தாலியை அடுத்து கொரோனா வைரஸ் ஸ்பெயினிலும் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது. ஸ்பெயினில் இதுவரை கொரோனா 10, 935 பேர் உயிரிழந்த நிலையில், 117,710 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் கொரோனா பிடியில் இருந்து 101 வயது மூதாட்டி குணமடைந்துள்ளார்.

ஹூஸ்கா (HUESCA) பகுதியிலுள்ள மருத்துவமனையில் மூதாட்டி என்கார்னாசியான் பூசான்(Encarnacion Buisan) என்பவர் கொரோனா பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவ சிகிச்சைக்கு இடையே தனது 101வது பிறந்த நாளை கடந்த மாதம் 15ம் தேதி கொண்டாடினார்.இருப்பினும் மருத்துவமனையில் தொடர்ந்து அளிக்கப்பட்ட சிகிச்சையில் அவரின் உடல்நிலை குணமடைந்தது. இதையடுத்து மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு மூதாட்டி என்கார்னாசியான் பூசான் அழைத்து செல்லப்பட்டார். கொரோனாவை வென்ற இவர் தற்போது கொரோனா பாதித்த மக்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி வருகிறார்.இதே போல் நெதர்லாந்திலும் கொரோனா பிடியில் இருந்து 101 வயது மூதாட்டி ஒருவர் குணமடைந்துள்ளார்.

Related Stories: