ரேபரேலி வாக்குச்சாவடிகளில் ராகுல்காந்தி ஆய்வு: வாக்குச்சாவடிகளுக்கு சென்ற ராகுலுக்கு உற்சாக வரவேற்பு அளித்து, ஆர்வமாக புகைப்படம் எடுத்த வாக்காளர்கள்

உத்திரப் பிரதேசம்: உத்திரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் ராகுல் காந்தி வாக்குச்சாவடிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். ராகுல் காந்தி போட்டியிடும் ரேபரேலி மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. உத்திரப் பிரதேசத்தில் 5வது கட்ட தேர்தல் நடைபெறும் பல்வேறு வாக்குச்சாவடிகளில் வாக்கு எந்திரங்கள் குறித்த புகார்கள் எழுந்த நிலையில் வாக்குச்சாவடிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது அங்கிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக முழக்கமிட்டு ராகுல் காந்தியை வரவேற்றனர். பின்னர் வாக்குச்சாவடிகளில் ஆய்வு நடத்திய ராகுல் காந்தியிடம் வரிசையில் நின்ற வாக்காளர்கள் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்து கொண்டனர். முன்னதாக ரேபரேலியில் உள்ள அனுமர் கோயிலுக்கு சென்று ராகுல் காந்தி வழிபாடு நடத்தினார். ஜனநாயகத்தை பாதுகாக்கவும், பாஜக-வை வீழ்த்தவும் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

The post ரேபரேலி வாக்குச்சாவடிகளில் ராகுல்காந்தி ஆய்வு: வாக்குச்சாவடிகளுக்கு சென்ற ராகுலுக்கு உற்சாக வரவேற்பு அளித்து, ஆர்வமாக புகைப்படம் எடுத்த வாக்காளர்கள் appeared first on Dinakaran.

Related Stories: