பாலியல் வழக்கில் ரேவண்ணாவுக்கு ஜாமீன்

பெங்களூரு: பாலியல் வழக்கில் கைதான மஜத எம்.எல்.ஏ எச்.டி.ரேவண்ணாவுக்கு பெங்களூரு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. கர்நாடகா மாநிலம் ஹாசன் தொகுதி மதச்சார்பற்ற ஜனதாதளம் எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது தந்தையும் ஹொளேநரசிபுரா தொகுதி எம்.எல்.ஏவுமான ரேவண்ணா ஆகிய இருவர் மீதும் பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் உல்லாசமாக இருந்த வீடியோக்கள் வைரலாகி பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டிற்கு தப்பியோடிவிட்டார். இந்த வழக்கை விசாரித்துவரும் சிறப்பு புலனாய்வுக்குழு மே 4ம் தேதி ரேவண்ணாவை கைது செய்தது.

பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணை கடத்திய வழக்கில் ரேவண்ணா கைது செய்யப்பட்டிருந்த நிலையில், ஜாமீன் பெற்ற ரேவண்ணாவை பாலியல் வழக்கில் கைது செய்ய எஸ்.ஐ.டி முயன்றது. பாலியல் வழக்கில் முன் ஜாமீன் வழங்கக்கோரி ரேவண்ணா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த 42வது ஏசிஎம்எம் நீதிமன்றம், ரேவண்ணாவுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்ற எஸ்.ஐ.டியின் வாதத்தை ஏற்க மறுத்து, ரூ.5 லட்சம் ரூபாய் பாண்டு, ஒருவர் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் ரேவண்ணாவுக்கு ஜாமீன் வழங்கியது. ரேவண்ணாவின் ஜாமீனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய எஸ்.ஐ.டி முடிவு செய்துள்ளது.

* 48 மணி நேரத்தில் பிரஜ்வல் ஆஜராக குமாரசாமி கோரிக்கை
பாலியல் வழக்கில் சிக்கி வெளிநாட்டில் பதுங்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருப்பதுடன், இன்டர்போல் ப்ளூ கார்னர் நோட்டீசும் வெளியிட்டுள்ளது. பிரஜ்வல் ரேவண்ணாவை இந்தியாவிற்கு அழைத்துவர எஸ்.ஐ.டி தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது. இந்நிலையில், 2 நாட்களில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு பிரஜ்வல் ரேவண்ணாவை எச்.டி.குமாரசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

The post பாலியல் வழக்கில் ரேவண்ணாவுக்கு ஜாமீன் appeared first on Dinakaran.

Related Stories: