ஐடி, மாநில லஞ்ச ஒழிப்பு துறை போதும் சிபிஐ, அமலாக்கத்துறை ஆபீஸ்களை மூட வேண்டும்: அகிலேஷ் யாதவ் காட்டம்


லக்னோ: உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ், தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, தேசிய புலனாய்வு முகமை, போதைப் பொருள் தடுப்பு பிரிவு போன்ற விசாரணை அமைப்புகளை ஒன்றிய பாஜக அரசு தவறாக பயன்படுத்துகிறது. குறிப்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அலுவலகங்களை மூட வேண்டும். மோசடியில் யாரேனும் ஈடுபட்டால், அவர்களை வருமான வரித்துறையை பார்த்துக் கொள்ளும். அதைவிடுத்து சிபிஐ, அமலாக்கத்துறை எதற்கு? ஒவ்வொரு மாநிலத்திலும் லஞ்ச ஒழிப்புத் துறை செயல்பட்டு வருகிறது.

அவர்களும் வழக்குகளை கையாள்கின்றனர். எதிர்கட்சிகளின் அரசை வீழ்த்த வேண்டும் என்றாலும், பாஜகவின் ஆட்சியை அமைக்க வேண்டுமானாலும் விசாரணை அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, என்ன தவறு நடந்தது என்பதை ஏன் விசாரணை அமைப்புகள் விசாரிக்கவில்லை? லோக்சபா தேர்தலுக்கு பிறகும் காங்கிரசுடனான கூட்டணி தொடரும். ஆனால் சமாஜ்வாதி கட்சி காங்கிரசுடன் சேராது’ என்றார்.

The post ஐடி, மாநில லஞ்ச ஒழிப்பு துறை போதும் சிபிஐ, அமலாக்கத்துறை ஆபீஸ்களை மூட வேண்டும்: அகிலேஷ் யாதவ் காட்டம் appeared first on Dinakaran.

Related Stories: