ஒடிசா மாநிலம் ஊழல்வாதிகளின் கைகளில் சிக்கி இருக்கிறது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

பிஜு ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகியான வி.கே.பாண்டியன் ஒடிசாவில் பூரி ஜெகநாதர் கோவில் அறக்கட்டளையை பூட்டி சாவியை தமிழ்நாட்டிற்கு எடுத்துச் சென்றுவிட்டதாக பிரதமர் மோடி குற்றம் சாடினார். ஒடிசாவில் கட்டாக் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். அப்போது ஒடிசாவில் உள்ள பூரி ஜெகநாதர் கோயில் கடந்த 6 ஆண்டுகளாக பூட்டப்பட்டு இருப்பதாக புகார் கூறினார். ஒடிசா மாநிலம் ஊழல்வாதிகளின் கைகளில் சிக்கி இருப்பதாக்க பிஜு ஜனதா முக்கிய நிர்வாகியான வி.கே.பாண்டியனை குற்றம் சாடினார்.

மேலும் தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட வி.கே.பாண்டியன் பூரி ஜெகநாதர் அறக்கட்டளையை பூட்டி சாவியை தமிழ்நாட்டிற்கு எடுத்துச் சென்றுவிட்டதாக மக்கள் கூறுவதாக அவர் குற்றம் சாடினார். நமது வீட்டின் சாவி காணாமல் போனால் சாவியை கண்டுபிடிக்க ஜெகநாதரிடம் வேண்டுவோம், ஆனால் ஜெகநாதர் கோயில் சாவியை காணாமல் போனது பற்றி யாரிடம் முறையிடுவது என்று மோடி கேள்வி எழுப்பினார். மேலும் நவீன் பட்நாயக் ஆட்சியில் விவசாயிகளும், இளைஞர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும்,வேலையின்மை அதிகரித்து இளைஞர்கள் பிற மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு இருப்பதாக பிரதமர் குற்றம் சாடினார்.

The post ஒடிசா மாநிலம் ஊழல்வாதிகளின் கைகளில் சிக்கி இருக்கிறது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு! appeared first on Dinakaran.

Related Stories: