கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், பணியாளர்களுக்கு மளிகை பொருட்கள்: திமுக சார்பில் வழங்கப்பட்டது

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையில் சுகாதார துறை, காவல் துறை, வருவாய் துறையினருக்கு உணவு மற்றும் 1 லட்சம் மதிப்புடைய மளிகை பொருட்கள் திமுக சார்பில் வழங்கப்பட்டது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.  இதனால், கடந்த 21ம் தேதி முதல் ஊத்துக்கோட்டையில் உள்ள ஆந்திர - தமிழக எல்லையில் சீல் வைக்கப்பட்டு வெளி மாநில ஆட்கள் தமிழகத்திற்குள் வர தடை விதித்து உள்ளனர். இதற்காக, ஊத்துக்கோட்டையில் சோதனை சாவடி, அண்ணா சிலை, சத்தியவேடு சாலை ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீஸ்காரர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் வருவாய் துறையினர் என 100க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மூன்று வேலை உணவு வழங்கப்பட்டது.

Advertising
Advertising

மேலும் பெரியபாளையம், ஆரணி, வெங்கல், பென்னலூர்பேட்டை ஆகிய காவல் நிலையங்களுக்கு ஊரடங்கு முடியும் வரை பாதுகாப்பு பணியிலும், சுகாதார பணியிலும் உள்ளவர்களுக்கு 1 லட்சம் மதிப்பிலான மளிகை பொருட்களையும் தொழிலதிபரும்,  திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளருமான  கே.வி.லோகேஷ் வழங்கினார். இவற்றை ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சந்திரதாசன் பெற்றுக்கொண்டார்.

Related Stories: