கொரோனா வைரஸ் பரவலை சாதகமாக்கி தனி நபர் கம்ப்யூட்டர்களில் சைபர் தாக்குதல் அதிகரிப்பு: சிஇஆர்டி எச்சரிக்கை

புதுடெல்லி: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, நாடு முழுவதும் 21 நாள் முடக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளதால், பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதி வழங்கியுள்ளது. அவர்கள் தங்களின் கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்கள் மூலம் ‘ரிமோட்டில்’ பணியாற்றி வருகின்றனர். இதுபோல், நாடு முழுவதும் லட்சக்கணக்கான ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றி வருகின்றனர்.இதை கம்ப்யூட்டர் கிரிமினல்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி சைபர் தாக்குதல் நடத்தி கம்பெனியின் முக்கிய தகவல்களை திருடுகின்றனர். இதை தடுப்பதற்காக, கம்ப்யூட்டர் அவசரகால நடவடிக்கை குழு (சிஇஆர்டி) வழங்கியுள்ள ஆலோசனைகள் வருமாறு:

* கம்ப்யூட்டர் குற்றவாளிகள் இந்த முடக்க காலத்தை தவறாக பயன்படுத்தி, பிரபல நிறுவனங்களின் பெயரில் ஏமாற்று இ-மெயில்களை அனுப்புகின்றனர். இதை திறந்து பார்க்கும்போது, அந்த கம்ப்யூட்டர், ரூட்டர், பாதுகாக்கப்படாத கம்யூட்டர் நெட்வொர்க் ஆகியவை ஹேக் செய்யப்பட்டு முக்கிய தகவல்கள் திருடப்படுகின்றன.

* இதுபோன்ற சைபர் தாக்குதல்களை தடுக்க,  வைபை ரூட்டர்களின் பாஸ்வேர்டுகளை வித்தியாசமாக பயன்படுத்த வேண்டும். ‘ரிமெம்பர் பாஸ்வேர்டு’ வசதியை பயன்படுத்தக் கூடாது.

* தகவல் பரிமாற்றத்துக்கு, உங்கள் நிறுவனம் பயன்படுத்தும் சாப்ட்வேரை மட்டும் பயன்படுத்த வேண்டும்.

Related Stories: