ஆபத்தை அறிந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கு நன்றி: அமைச்சர் அனில் தேஷ்முக்

மகாராஷ்ட்டிரா: உலகம் முழுவதும் அச்சுறுத்திய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16-ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 649 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது வரை ஒருவர் உயிரிழந்துள்ளார். 26 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, பால், காய்கறி, உணவுப் பொருட்கள், மருத்துவம், தண்ணீர், ஊடகம் தவிர மற்ற முக்கியமில்லாத விஷயங்களுக்கு வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என்று ஏப்ரல் 15-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு  பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தடை உத்தரவை மீறி அத்தியாவசியமின்றி யாராவது வீட்டில் இருந்து வெளியே வந்து சாலைகளில் சுற்றித் திரிந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய, மாநில அரசுகள் எச்சரித்துள்ளது. மகாராஷ்டிராவில் பணிக்கு செல்லும் காவலர் ஒருவரை அவரது குழந்தை வெளியில் செல்ல வேண்டாம் என கூறும் உருக்கமான வீடியோவை அம்மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவை பகிர்ந்து ஆபத்தை அறிந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கு நன்றி என பதிவிட்டுள்ள அவர் காவல்துறையினர் தங்கள் குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: