90,000 என்.ஆர்.ஐ. சொந்த ஊர் திரும்பியதால் பல ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி என பஞ்சாப் அரசு அறிவிப்பு

சண்டிகர் : பஞ்சாப் மாநிலத்தில் பல ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி ஏற்பட்டு இருப்பதாக அம்மாநில அரசு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், வெளிநாடுகளில் வசிக்கும் 90,000 பஞ்சாபிகள் இந்த மாதம் சொந்த ஊர் திரும்பினர்.இவர்களை பரிசோதனை செய்து பார்த்ததில் பல ஆயிரம் பேருக்கு கோரோனா அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் பஞ்சாப்பில் கொரோனா பாதிப்பு அச்சமூட்டும் வகையில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பல்பீர் சிங் சித்து எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவிலேயே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள முதல் மாநிலம் பஞ்சாப் ஆகும். இந்தியாவிலேயே பஞ்சாப்பிகள் தான் அதிக அளவில் வெளிநாடுகளில் வசிப்போர் ஆவர்.இவர்களில் வெறும் 90,000 பேர் மட்டும் பஞ்சாப் திரும்பியுள்ளனர். ஆனால் இவர்களில் பெரும்பாலானோருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதால் அம்மாநில அரசு அச்சத்தில் உறைந்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்தும் பணியாக உடனடியாக தங்களுக்கு ரூ.150 கோடி தேவை என்று முதலமைச்சர் அமரிந்தர் சிங் கூறியுள்ளார்.பஞ்சாப்பில் இதுவரை 23 பேருக்கு கோரோனா உறுதியாகி இருந்த நிலையில், ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.

Related Stories: