இணையத்தைக் கலங்கடித்த புகைப்படம்

நன்றி குங்குமம் முத்தாரம்

Advertising
Advertising

உலகை உலுக்கிக் கொண்டிருக்கும் புகைப்படம் இது. சிரியாவைச் சேர்ந்த நான்கு வயது சிறுவன் மார்வான். போரின் கொடூரங்களில் இருந்து தப்புவதற்கு நாட்டில் இருந்து ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக வெளியேறி ஜோர்டானில் தஞ்சமடைய பயணம் மேற்கொண்டனர். அந்த ஆயிரம் அகதிகளில் மார்வானும் ஒருவன். தனி ஒருவனாக அவனும் பல நூறு கிலோ மீட்டர் பயணம் செய்திருக்கிறான்.

அவனுடைய பெற்றோர்கள் என்ன ஆனார்கள்? உயிரோடு இருக்கிறார்களா? என்று கூட தெரியவில்லை. ஜோர்டானின் எல்லையில் ஒரு துணிப்பையுடன் அவன் தனியாக நடந்து வரும்போது ஐ.நா.வின் அகதிகள் பாதுகாப்புத் துறையினரின் கண்ணில் பட்டிருக்கிறான் மார்வான். அவனை பெற்றோர்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சி நடந்துகொண்டிருக்கிறது. மார்வானின் நிலை போரின் மீது பலருக்கு வெறுப்புணர்வை அதிகமாக்கியிருக்கிறது.

Related Stories: