இரும்பு நதி

நன்றி குங்குமம் முத்தாரம்

Advertising
Advertising

ஸ்பெயின் தென்மேற்குப் பகுதியில் பாய்கிறது ரியோ டிண்டோ என்கிற நதி. சுமார் 100 கிலோ மீட்டர் நீளம் பாய்ந்து செல்லும் இந்த நதி செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பைப் போல் இருக்கிறது என்கின்றனர் விஞ்ஞானிகள். இதன் ஸ்பெஷலே வண்ணம் தான். ஆம்; ரியோ டிண்டோவின் நீர் சிவப்பு வண்ணத்தில் காட்சியளிக்கிறது. அதிகப்படியான இரும்புத்தாதுவும், மெட்டல்களும் நதியில் கலந்திருப்பதுதான் இந்த வண்ணத்துக்குக் காரணம்.

அதனால் இதை இரும்பு நதி என்றும் அழைக்கின்றனர். தவிர, இந்த நதி நீருக்கு அமிலத்தன்மையும் இருக்கிறது. நதியைச் சுற்றியிருந்த சுரங்கங்களில் இருந்து வெளியான மாசுக்கள் ஆயிரக்கணக்கான வருடங்களாக நதியில் கலந்ததால் இப்போது அது சிவப்பாகிவிட்டது என்று ஒரு தரப்பினர் சொல்கின்றனர்.

Related Stories: