அம்பத்தூர்: அம்பத்தூர் தொழிற்பேட்டை தொலைபேசி இணைப்பகம் அருகில் சாலையோரம் வசித்து வருபவர் ராமாயி (80). இவரது சொந்த ஊர் சேலம் மாவட்டம் சின்னசேலம். நேற்று முன்தினம் இரவு ராமாயி அம்பத்தூர் தொலைபேசி இணைப்பகம் அருகே சாலை ஓரத்தில் தூங்கிக்கொண்டிருந்தார். அதிகாலை 3 மணிக்கு அங்கு வந்த ஒரு வாலிபர், மூதாட்டியை பலாத்காரம் செய்துள்ளார். அவரது அலறல் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அந்த வாலிபரை மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்து, அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.