வேகத்தில் மாற்றம் இருக்கும் கேப்டன் விராட் கோஹ்லி

கிறிஸ்ட்சர்ச்: இந்திய வேகப் பந்து வீச்சாளர்களில் இளம் வயதுக்காரர் பும்ரா(26). சிறப்பாக பந்து வீசும் முகமது ஷமி(29), இஷாந்த் சர்மா(32), உமேஷ் யாதவ்(32) ஆகியோர் 30களில் இருக்கின்றனர். இந்நிலையில் நியூசிலாந்திடம் வாங்கிய பலத்த அடிக்கு பிறகு  கேப்டன் கோஹ்லி, ‘இதுப்போன்ற தருணங்களில் மிகவும் கவனமுடனும், விழிப்புடனும் இருக்க வேண்டும். இந்த சூழ்நிலைகளில் மாற்றங்களுக்கு தயாராக வேண்டும். வேகப்பந்து வீச்சில் சிறய மாற்றங்கள் இருக்கும். புதிய தோழமைகளுக்கு வாய்ப்பு உள்ளது’ என்று கூறியுள்ளார். புதிய வீரர் யார் என்று கோஹ்லி சொல்லாவிட்டாலும், ரஞ்சி தொடரில் கலக்கி வரும் முகமது சிராஜ்(ஐதராபாத்), சந்தீப் வாரியர்(கேரளா), அவேஷ்கான்(மத்திய பிரதேசம்), இஷான் போரெல்(பெங்கால்) ஆகிய வீரர்களில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம். அது விரைவில் தொடங்க உள்ள தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடரில் தெரிய வரலாம். இன்னொரு முக்கிய விஷயம் கோஹ்லி(31)யும் 30வயதை கடந்தவர்கள் பட்டியலில் சேர்ந்து விட்டார்.

Related Stories: