பூமிக்குத் திரும்பினார் கிறிஸ்டினா கோச்!

நன்றி குங்குமம் முத்தாரம்

உலகிலேயே தொடர்ந்து அதிக நாட்கள் விண்வெளியில் இருந்த பெண் என்ற பெருமையைத் தன்வசமாக்கியவர் கிறிஸ்டினா கோச். அமெரிக்காவைச் சேர்ந்த பொறியாளர் மற்றும் ‘நாசா’வின் விண்வெளி வீராங்கனையான கோச் மார்ச் 14, 2019 அன்று விண்வெளிக்குப் பயணமானார். 328 நாட்கள், 13 மணி நேரம், 58 நிமிடங்கள் விண்வெளியில் தங்கியிருந்து பிப்ரவரி 6, 2020-இல் பூமிக்குத் திரும்பினார்.

இவ்வளவு நாட்களுக்குப் பிறகு டெக்சாஸில் உள்ள  வீட்டுக்குள் கோச் நுழைந்ததும், அவரது செல்ல நாய் ஓடி வந்து தாவிப்பிடித்துக்கொண்டது. இதை கோச்சின் கணவர் வீடியோவாக் கினார்.  இணையத்தில் தட்டிவிட்டார் கோச். சில மணி நேரங்களில் அந்த வீடியோ வைரலாகிவிட்டது. ‘‘உண்மையில் யார் உற்சாகமாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இவ்வளவு நாட்களுக்குப் பிறகும் எனது செல்ல நாய் என்னை நினைவில் வைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது...’’என்று டுவிட்டியிருக்கிறார் கோச்.

Related Stories: