சிறந்த பாடகர்களை உருவாக்கும் தீவு

நன்றி குங்குமம் முத்தாரம்

நடனமும் பாட்டுப் பாடுவதும் பள்ளியில் கட்டாயப் பாடமாக இருக்கும் ஓர் இடம் குக் தீவுகள். அதனால் அங்கே வசிப்பவர்களில் பலர் சிறந்த பாடகர்களாகவும் நடனக் கலைஞர்களாகவும் உலா வருகின்றனர். தவிர, மெக்டொனால்டு, ஸ்டார்பக்ஸ் போன்ற பெரிய உணவக நிறுவனங்களின் கடைகளும் அங்கே இல்லை. இவ்வளவு தனித்தன்மை வாய்ந்த குக் தீவுகள் தென் பசிபிக் பெருங்கடலில் ஒய்யாரமாக வீற்றிருக்கின்றன.

சுமார் 240 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் வீற்றிருக்கும் இங்கே15 தீவுகள் இருக்கின்றன. 18 ஆயிரம் பேர் இங்கே வசிக்கிறார்கள். வருடந்தோறும் இரண்டு லட்சம் சுற்றுலாப்பயணிகள் குக் தீவுகளைச் சுற்றிப்பார்க்க வருகின்றனர். இதன் பாதுகாப்பு, வெளியுறவு போன்றவை நியூசிலாந்தின் பொறுப்பில் இருந்தாலும் குக் தீவுகள் தனித்து இயங்குகின்றன.

Related Stories: