இனி கொசு மனிதனைக் கடிக்காது

நன்றி குங்குமம் முத்தாரம்

தலைப்பைப் படித்ததும் சந்தோஷமடைய வேண்டாம். ஆனால், கொசுக்கள் மனிதனைக் கடிக்காத ஒரு நிலை வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. கொசுக்கள் அதிகமாக உண்ணும் உணவு தேன்.  இந்தத் தேனுக்காக பூக்களை நாடிச் செல்கின்றன கொசுக்கள். அந்தப் பூக்களை வைத்தே கொசுக்களின் செயல்பாட்டை திசை திருப்ப என்னென்ன வழிகள் இருக்கின்றன என்று ஆராய்ந்து வருகின்றனர் அமெரிக்க விஞ்ஞானிகள். தேனுக்காக சில மலர்களை மட்டுமே அதிகமாக கொசுக்கள் தேடிச் செல்கின்றன. அந்த மலர்களுக்கு உரிய பொதுவான தன்மை அதிக வாசனை. இந்த மலர்களிலிருந்து தேனைப் பருகுவதால் கொசுக்கள் சுறுசுறுப்பாக செயல்படுவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

முள்ளை முள்ளால் எடுப்பது மாதிரி இந்த மலர்களில் உள்ள வேதிப்பொருட்களைப் பயன்படுத்தி கொசுவின் செயல்பாட்டை திசை திருப்ப முடியுமா என்று ஆராய்ந்து வருகின்றனர். அதாவது கொசுக்களைக் கொல்லாமல் அவை மனிதர்களைக் கடிக்காமல் இருப்பதற்கு எதாவது வழிவகைகள் இருக்கின்றனவா என்பதே அந்த ஆராய்ச்சியின் முக்கிய நோக்கம். அதனால் கொசுக்கள் தேடிச்செல்லும் மலர்களையும் நன்கு கண்காணித்து வருகின்றனர்.

தொகுப்பு: க.கதிரவன்

Related Stories: