பூசணிக்காய் அல்வா

செய்முறை :முதலில் பூசணிக்காயின் தோலை நீக்கி விட்டு நைசாக துருவித் தண்ணீர் இல்லாமல் பிழிந்தெடுத்து கொள்ளவும். வாணலியில் நெய் சூடானதும், பூசணித்துருவலை போட்டு 10 நிமிடம் குறைந்த தணலில் வைத்து வதக்கவும். பின்னர் பாலுடன் ஒரு டம்ளர் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் விட்டு கொதிக்க விடவும்.கெட்டியானதும் சர்க்கரை சேர்த்து கிளறி ஏலக்காயை பொடி செய்து, கேசரிப் பவுடர், குங்குமப்பூ இவற்றுடன் சேர்த்து மூன்றையும், பூசணிக்கலவையுடன் கலக்கவும். பின்பு நன்கு கிளறி வாணலியில் ஒட்டாமல் சுருள் வந்ததும், மீதி நெய்யையும் வறுத்த முந்திரிப்பருப்பையும் போட்டுக் கிளறி இறக்கவும்.மாறுபட்ட சுவையில் பூசணிக்காய் அல்வா ரெடி.

Related Stories: