ஆடு, மாடுகளை திருடியவர் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு

கிரேட்டர் நொய்டா: கால்நடைகளை திருடி வந்தவர் மீது போலீசார் சுட்டததில் காயம் அடைந்தார். உத்தரப்  பிரதேச மாநிலத்தில் கால்நடை திருட்டில் பல கும்பல்கள் ஈடுபட்டு வருகின்றன.  மாமிசத்துக்காகவும், விற்று பணம் சம்பாதிக்காவும் இரவு நேரங்களில் இந்த  கும்பல் கிராமம் கிராமமாக வாகனத்தில் சென்று பசு, எருமை, காளை, ஆடுகளை  திருடி வருகின்றன. இது தொடர்பாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இந்நிலையில்  கடந்த நேற்று அதிகாலை ஜார்ச்சா பகுதியில் சாலையில் வந்த வாகனத்தை போலீசார்  தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் வாகனத்தில் இருந்தவர்கள் போலீசார் மீது  துப்பாக்கியால் சுட்டனர். தற்காப்புக்காக போலீசார் எதிர் தாக்குதல்  நடத்தினர். இதில் மாடு திருடும் கும்பலைச் சேர்ந்த இருவர் மீது குண்டுகள்  பாய்ந்தது. இருவர் தப்பியோடினர். காயம் அடைந்தவர்களை போலீசார்  மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இது  குறித்து போலீசார் கூறுகையில், ‘‘ நள்ளிரவு 2.15 மணி அளவில் வாகனத்தை  நிறுத்த கூறிய போது, போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டனர். போலீசார்  திருப்பி சுட்டததில் இருவர் காயம் அடைந்தனர். வேனில் இருந்த இருவர்  தப்பியோடினர். அவர்களை வலை வீசி தேடி வருகிறோம். காயம் அடைந்தவர்களின்  பெயர்  காஜியாபாத்தைச் சேர்ந்த பர்வேஸ் என்கிற பூரா எனத் தெரிய வந்தது  இவரிடமிருந்து நாட்டுத் துப்பாக்கி, தோட்டாக்களை கைப்பற்றியுள்ளோம்.   பூராவும் அவரது கூட்டாளிகளும், இரவு நேரங்களில் கிராமப் பகுதிகளில் எருமை மாடுகளை திருடி வந்துள்ளனர்.  தடுப்பவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டும் உள்ளனர்.  பூரா மீது 35 முதல் தகவல் அறிக்கைகள் பதியப்பட்டுள்ளது. சிறையிலும் இருந்துள்ளான்’’ என்றனர்.

Related Stories: