விலை வீழ்ச்சியால் பரிதாபம் தக்காளியை பறிக்காமல் செடியிலேயே விடும் அவலம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி விலைகடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதால், பழத்தை பறிக்காமல் செடியிலேயேவிவசாயிகள் விட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, மாதேப்பட்டி, ஆலப்பட்டி, பூவத்தி, ராயக்கோட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலானவிவசாயிகள் தக்காளி சாகுபடி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக தக்காளி விளைச்சல் அமோகமாகஉள்ளது. இதனால், மார்கெட்டில் தக்காளி விலை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது. அதன்படி, நேற்று ஒரு கிலோ தக்காளி 5க்கும் விற்பனைசெய்யப்பட்டது. விலை சரிவால் விவசாயிகள் பெரும்வேதனைக்குள்ளாகியுள்ளனர். இதனால், தோட்டத்தில் விளைந்த தக்காளிபழங்களை பறிக்காமல் அப்படியே விட்டுள்ளனர். அவை செடியிலேயே அழுகிவிழுந்த வண்ணம் உள்ளது.

இதுகுறித்து, தின்னகழனி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள்கூறுகையில், தற்போது தக்காளி விளைச்சல் அமோகமாக இருந்தது. இதனால், கூடுதல் வருவாய் கிடைக்கும் என மகிழ்ச்சியுடன்இருந்தோம். ஆனால், ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளிலும் தக்காளி விளைச்சல்அமோகமாக உள்ளதால், வெளி மாநிலத்தில் இருந்து வரும் வியாபாரிகள்தற்போது வருவதில்லை. அவர்கள் வரத்து சரிந்துள்ளதால் உள்ளூர்மார்க்கெட்டை நம்பியே தக்காளி விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், தற்போது ஒரு கிலோ தக்காளி ₹5க்கும் குறைவாகவே விற்பனைசெய்யப்படுகிறது. இதனால், செடிகளில் இருந்து தக்காளி பழங்களை பறித்து, அதை கூடையில் வைத்து மார்க்கெட்டுக்கு சென்று, அங்கு வரி செலுத்திவிற்பனை செய்ய வேண்டும். எனவே, தான் நாங்கள் தக்காளியை பறிக்காமல்அப்படியே விட்டுவிட்டோம் என வேதனையுடன் தெரிவித்தனர்.

Related Stories: