வாஷிங்டன்: அமெரிக்க செனட் உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், மைனே மாகாண சபாநாயகர் ரூ.54 கோடி தேர்தல் நிதி திரட்டியுள்ளார். அமெரிக்காவின் மைனே மாகாண சபாநாயகர் சாரா கிடியன். இவரது தந்தை இந்தியர். தாய் அமெரிக்காவைச் சேர்ந்தவர். அமெரிக்காவில் வரும் நவம்பரில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் சார்பில் செனட் உறுப்பினர் பதவிக்கு போட்டியிட போவதாக சாரா கடந்தாண்டு ஆண்டு ஜூன் மாதம் அறிவித்தார். ஆளும் குடியரசு கட்சியின் தற்போதைய செனட் உறுப்பினர் சூசன் காலின்சை எதிர்த்து இவர் போட்டியிட உள்ளார். இதற்காக தேர்தல் நிதி திரட்டும் பணியில் சாரா இறங்கினார்.