ஏனாமில் ஆய்வுக்கு சென்ற கவர்னருக்கு கருப்பு பலூன்களுடன் எதிர்ப்பு: அமைச்சரை கிண்டல் அடித்த கிரண்பேடி

புதுச்சேரி: ஏனாம் சென்ற கவர்னர் கிரண்பேடிக்கு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கருப்புச்சட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் பொதுமக்கள் கையில் கருப்பு பலூன்களை பிடித்தபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுவை மாநிலம் ஏனாம் தொகுதியில் வளர்ச்சி பணிகளை தடுக்கும் கிரண்பேடி தன்னுடைய தொகுதிக்கு வரக்கூடாது என அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார். இருப்பினும் கவர்னர் நேற்று காலை ஏனாம் சென்றார். அங்கு சென்ற கிரண்பேடிக்கு பொதுமக்கள் கருப்பு பலூன்களை கையில் பிடித்தபடி எதிர்ப்பு தெரிவித்தனர். அவர் செல்லும் வழி நெடுகிலும் கருப்பு கொடியுடனும், கோரிக்கை அட்டைகளை பிடித்தபடி முற்றுகையிட நின்றவர்களை போலீசார் தடுத்தனர்.

அமைச்சரும் தனது வீட்டில் கருப்புக் கொடி ஏற்றியதோடு, கருப்பு பலூன்களை கையில் பிடித்தபடி இருக்கும் படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். ஆனால் அமைச்சர் படம் தெரியாதபடி பதிவிடப்பட்டு இருந்தது. அதற்கு கிண்டலாக கவர்னர் கிரண்பேடி தனது வாட்ஸ்அப் பதிவில், ஏனாமில் நிர்வாகத்தை அணுகுவதற்காகவே ராஜ்நிவாஸ் குழு மற்றும் மூத்த அதிகாரிகள் சென்றுள்ளோம். ஆனால், எனக்கு எதிர்ப்பாக ஏனாமில் ராஜ்நிவாஸ் குழுவை வரவேற்க யாரோ ஒருவர் கருப்பு பலூன்களுடன் அமர்ந்து இருக்கிறார் என கூறியுள்ளார்.

Related Stories: