குரங்கு விசாரணை

நன்றி குங்குமம் முத்தாரம்

1991-ம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இருந்த காபி குடுவையின் நிலையை அடிக்கடி சென்று பரிசோதிப் பதற்கு பதிலாக முதன்முதலில் கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டது. இதுதான் உலகின் முதல் வெப் கேமரா!1960களில் பர்மாவிலிருந்து கப்பலில் வந்த தமிழ் அகதிகள் சென்னை கடற்கரை ரயில் நிலையத்தின் முன்பு காத்திருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர். அப்போது அவர்கள் கைச்செலவுக்காக தாங்கள் கொண்டு வந்திருந்த காலணிகள் மற்றும் இதர பிளாஸ்டிக் பொருள்களை விற்பனை செய்தனர். இப்படித்தான் பர்மா பஜார் தோன்றியது. இப்பொழுது பர்மா பஜார் மின்னணுப் பொருட்கள் விற்பனை செய்யும் சந்தையாகத் திகழ்கிறது. பிந்தி (Bhendi) பஜார் மும்பையில் கிராபோர்ட் மார்க்கெட்டுக்கு வடக்கே அமைந்துள்ளது.தெற்குப் பகுதியில் பிரிட்டிஷாரின் குடியிருப்பு அமைந்திருந்தது. ‘மார்க்கெட்டுக்கு அருகில்’ எனப் பொருள்படும் Behind the Bazaar என்ற ஆங்கிலச் சொற்றொடரே பிந்தி பஜாராக மாறியது.

இந்துஸ்தானி இசையில் பிந்தி பஜார் என்ற கர்ணம் 19ம் நூற்றாண்டில் கான் சகோதரர்களால் ஏற் படுத்தப்பட்டது. மார்க்கெட் பெயரால் அழைக்கப்படும் ஒரே கர்ணம் இதுவேயாகும். பழைய டெல்லியில் உள்ள பிரபல சாந்தினி செளக் மார்க்கெட் அவுரங்கசீப்பின் மகள் ஜகனாரா பேகத்தால் கட்டப்பட்டது. 1781ல் ராபர்ட் கிளைவ் கொல்கத்தாவில் கட்டிய வில்லியம்  கோட்டையில் ஒரு முறை கூட சண்டை எதுவும் நடைபெற்றதில்லை. ‘உலகில் சண்டை எதுவும் நடைபெறாத கோட்டை’ என்ற சிறப்பை இது பெற்றுள்ளது. மன்னர் பிம்பிசாரர் காலத்தில் அரண்மனை  வைத்தியராக இருந்தவர்  பெயர் ஜீவகன். இவர் புத்தருக்கு சிகிச்சை அளித்ததன் மூலம் புகழ் பெற்றார். ஒலிம்பிக்ஸைப் போல் Delphic Games அனைத்து நாடுகளையும் கலை மற்றும் கலாசாரம் மூலம் இணைக்கிறது.Hymen என்ற கிரேக்க கடவுள் அனைத்து திருமண நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதாக பழங்காலத்தில் கிரேக்கர்கள் நம்பினர். இக்கடவுளை ‘திருமண நிகழ்ச்சி களின் கடவுள்’ எனப் போற்றினர்.

அமெரிக்காவின் டென் னஸி மாகாணத்தில் டார்வினு டைய பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டைக் கற்பிக்க 1925 வரை தடைவிதிக்கப்பட்டது. இதை மீறிய ஜான் டி கோப்ஸ் என்பவர் மீது விசாரணை நடந்தது. இவ்விசாரணை குரங்கு விசாரணை என அழைக்கப்பட்டது. கரீபியக் கடல் பகுதியில்  காணப்படும் பிளேடுஃபின் பேஸ்லெட் (Bladefin Basslet) என்ற  3 செ.மீ வளரும் மீனின் விலை 10 ஆயிரம் டாலர்கள் ஆகும். இது ஆழ்கடலில் 150 மீட்டர் ஆழத்தில் உள்ளதால் இதைப் பிடிப்பது கடினம். மொராவியாவிலுள்ள  (இப்போது ஸ்லாஸ்கோவ் யு பிரனா, செக் குடியரசு) அஸ்டாலிட்ஸ் அருகே 1805ல் நடந்த போர் ‘மூன்று கூட்டணிப் போர்’ என்று அழைக்கப்படுகிறது. இதில் ரஷ்யாவின் முதலாம் அலெக்ஸாண்டர் மற்றும் மிக்கைல் கட்டுஸாவ் ஆகியோ ரின் தலைமையிலான சுமார் 90,000 ரஷ்ய மற்றும் ஆஸ்திரிய போர் வீரர்களை, நெப்போலியனின் 68,000 வீரர்கள் தோற்கடித்தனர். இப்போரில் நெப்போலியன் பெற்ற மிகப் பெரும் வெற்றியால், ஆஸ்திரியா பணிந்து போனது.

Related Stories: