கொல்கத்தா துறைமுகத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் கப்பல் ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனை

கொல்கத்தா: வெளிநாடுகளில் இருந்து வரும் கப்பல் ஊழியர்களுக்கு கொல்கத்தா துறைமுகத்தில் மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. கப்பல் ஊழியர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய மருத்துவ குழு ஒன்று பரிசோதனை செய்து வருகிறது. சீனாவின் வுஹான் நகரில் முதலில் கண்டறியப்பட்ட கரோனா வைஸ், பீஜிங், ஷாங்காய் போன்ற நகரங்களில் பரவி வருகிறது.

Advertising
Advertising

சீனாவில் கரோனா வைரஸ் நோயின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் நோயால் பலியானோர் எண்ணிக்கை 106 ஆக அதிகரித்துள்ளது. 4,500 பேருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதில் 127 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனா மட்டுமின்றி தாய்லாந்து , ஜப்பான், தென் கொரியா , அமெரிக்கா , வியட்நாம் , சிங்கப்பூர் , மலேசியா , நேபாளம் , பிரான்ஸ், ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கும் கரோனா வைரஸ் பரவி அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சீனாவில் இருந்து வருபவர்களை பல்வேறு நாடுகள் முழு உடல் பரிசோதனை செய்த பிறகே விமான நிலையத்திலிருந்து வெளியேற அனுமதிக்கின்றன. இந்த நிலையில் இந்தியாவிலும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை முழு உடல் சோதனை செய்த பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். இதன் தொடர்ச்சியாக கரோனா வைரஸ் பாதிப்பு  உள்ளதா என்று வெளிநாடுகளில் இருந்து வரும் கப்பல் ஊழியர்களுக்கு கொல்கத்தா துறைமுகத்தில் மருத்துவ பரிசோதனை தற்போது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: