அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்

சென்னை: மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும்பல்வேறு திட்டப்பணிகள், முன்னேற்றம் குறித்த பணி ஆய்வுக்கூட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  தலைமையில் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள், முன்னேற்றம் குறித்த பணி ஆய்வுக்கூட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக்கடன் இணைப்பின் மூலம் ரூ.12,500 கோடி வழங்க நிர்ணயிக்கப்பட்ட இலக்கு குறித்தும், தேசிய ஊரக பொருளாதார புத்தாக்கத் திட்டத்தை நடப்பாண்டு முதல் அடுத்த 4 ஆண்டுகளுக்கு ரூ.210.27 கோடி மதிப்பீட்டில், கடலூர், ஈரோடு, சேலம், தஞ்சாவூர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய 5 மாவட்டங்களில் தலா 4 வட்டாரங்களில் செயல்படுத்துவது குறித்து  கேட்டறிந்தார்.

மேலும், 2019-20 மானியக் கோரிக்கையின் போது அறிவித்த தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் 7,000 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.10.5 கோடி மதிப்பில் குழு ஒன்றுக்கு ரூ.15,000 வீதம் ஆதார நிதியாக  தற்போதுவரை வழங்கப்பட்டுள்ள நிதி குறித்தும், 17,900 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.89.5 கோடி மதிப்பில் குழு ஒன்றுக்கு ரூ50,000 முதல் ரூ.75,000 வரை வழங்கப்பட்டுள்ள சமுதாய முதலீட்டு நிதி குறித்தும் தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டத்தின் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் குறித்து  கேட்டறிந்தார். இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: