என்னிடம் மன்னிப்பு கேளுங்கள் புதுச்சேரி மக்களை கிரண்பேடி அவமதித்து விட்டார்: முதல்வர் நாராயணசாமி ஆவேசம்

புதுச்சேரி: புதுச்சேரி மக்களை கிரண்பேடி அவமதித்துவிட்டதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து  அவர் நேற்று அளித்த பேட்டி: கடந்த சில  நாட்களுக்கு முன் கவர்னர் கிரண்பேடி தனது டிவிட்டர் பக்கத்தில் அரசு அதிகாரிகளை மிரட்டி பணிய வைப்பதாகவும், பல்வேறு வகையில் தொல்லை கொடுப்பதாக கூறியிருந்தார்.  இதனை கேட்கும்போது எனக்கு சிரிப்பு தான் வந்தது. அதிகாரிகளை கவர்னர்  மாளிகைக்கு அழைத்து மிரட்டுவது, துன்புறுத்துவதும் கிரண்பேடி தான். கவர்னர்  மாளிகையில், தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவரை மதித்து ஜனநாயக முறைப்படி சென்றோம்.  நாங்கள் ஏன் வெளிடப்பு செய்தோம் என்ற காரணத்தை மக்களுக்கு சொல்ல வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது.  தேநீர் விருந்துக்கு அழைத்து எங்களுக்கு தெரியாமல் விருது, சான்றிதழ் கொடுப்பது அதிகார மீறல், துஷ்பிரயோகம்.  மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு தெரியாமல்  மக்களை அவமதிக்கிறார்.

அவர் தான்தோன்றித்தனமாக செயல்பட எதற்காக இங்கு அரசாங்கம்? எனக்கு முறையாக தெரிவிக்காமல், ஒப்புதல் இல்லாமல் என்னை விருது வழங்க சொன்ன கவர்னர்தான் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார். இது குறித்து சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ள கிரண்பேடி, பத்ம விருதுகள் பெற இருந்த  மனோஜ் தாஸ் மற்றும் முனுசாமி இருவரையும் கவுரவிப்பதற்காக முதலமைச்சரை அழைத்தபோது, ஆளுநர் மாளிகை கட்டுப்பட்டு அலுவலரிடம் எந்தவித முன்னறிவிப்பின்று எவ்வாறு? இப்படி செய்யலாம் என முதலமைச்சர் சத்தமிட்டு வெளியேறினார்,  அமைச்சர்களும் வெளியேறினர். இதற்கு முதல்வர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Related Stories: