குடியரசு தினவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு படையினருக்கு வீரதீர விருதுகள் அறிவிப்பு

புதுடெல்லி: குடியரசு தினவிழாவை முன்னிட்டு ராணுவம், துணை ராணுவம் மற்றும் காவல் துறையினருக்கு வீர திர விருதுகள் அறிவிக்கப்படும்.

* இந்தாண்டு வடக்கு மண்டல ராணுவ கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் ரன்பீர் சிங் உட்பட 19 உயர் ராணுவ அதிகாரிகளுக்கு பரம் விசிஸ்ட் சேவா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  6 பேருக்கு சவுரிய சக்ரா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  இது தவிர 151 சேனா பதக்கங்களும், 8 யுத்த சேவா பதக்கங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

* காஷ்மீரின் நகரில் உள்ள ராணுவத்தின் 15 படைப்பிரிவின் கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் கே.ஜே.எஸ் தில்லானுக்கு உத்தம் யுத் சேவா பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு காஷ்மீர் போலீசாருக்கு அதிகபட்சமாக 108 விருதுகள்  வழங்கப் படுகிறது. இதற்கு அடுத்த படியாக ரிசர்வ் போலீஸ் படையினருக்கு 76 விருதுகள் வழங்கப்படுகிறது.  

* ஜார்கண்ட்டில் நக்சல் கமாண்டர் ஷாதேவ் ராய் என்பவர், சாஸ்த்ர சீமா பால் படையினரால் கடந்த 2018ம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்காக உதவி கமாண்ட்ன்ட் நர்பத் சிங் உள்ளிட்ட 4 போலீசாருக்கு, வீரதீர போலீஸ்  பதக்கம்(பிஎம்ஜி) அறிவிக்கப்பட்டுள்ளது.

* துணை ராணுவ படையான இந்தோ-திபெத் எல்லை போலீஸ் அதிகாரிகளுக்கு போலீஸ் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்படையில் உயர் அதிகாரி ரத்தன் சிங் சோனல், துரை ராஜ், டிஐஜி ராவத், நிஷித் சந்திரா உட்பட 15 பேருக்கு  போலீஸ் சேவை பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ன.  சிபிஐ அதிகாரிகள் 28 பேருக்கு ஜனாதிபதி போலீஸ் வருது வழங்கப்படுகிறது. இவர்களில் டிஎஸ்பி ராமசாமி பார்த்த சாரதி, ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர்  ப.சிதம்பரத்தை கைது செய்தவர்.

டெல்லியில் உள்ள சிதம்பரம் வீட்டின் காம்பவுண்ட் சுவர் ஏறி தாவியவர். கார்த்தி சிதம்பரத்தையும் இவர்தான் கைது செய்தார். டிஎஸ்பி திரேந்திர சங்கர் சுக்லா, எஸ்.பி.க்கள் பினய் குமார், நிர்பய் குமார் ஆகியோருக்கும் போலீஸ் விருதுகள்  அறிவிக்கப்பட்டுள்ளன.  

முதல் ரேங்க் மாணவர்களுக்கு கவுரவம்

நாடு முழுவதும் சிபிஎஸ்இ மற்றும் பல்கலைக்கழக தேர்வுகளில் முதல் ரேங்க் பெற்ற 105 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.  டெல்லியில் நாளை நடைபெறும் குடியரசு தின நிகழ்ச்சியை, இவர்கள் பிரதமர் மோடி அமர்ந்திருக்கும்  பகுதியில் அமர்ந்து பார்க்கவுள்ளனர். இவர்களில் 50 பேர் இளநிலை, முதுநிலை மற்றும் பிஎச்டி மாணவர்கள். 10ம் வகுப்பு தேர்வில் முதல் இடம் பிடித்த 30 பேரும், 12ம் வகுப்பு தேர்வில் முதல் இடம் பிடித்த 25 பேரும் அடங்குவர். அணிவகுப்பு  முடிந்தபின் இவர்களுக்கு, மனித வள மேம்பாட்டுத்துறை சான்றிதழ் வழங்கும்.

Related Stories: