சிஏஏ பற்றி ராகுலால் 10 வரி பேச முடியுமா? பாஜ தலைவர் நட்டா கேள்வி

ஆக்ரா: ‘‘குடியுரிமை திருத்த சட்டம் பற்றி ராகுல் காந்தியால் 10 வரி பேச முடியுமா?’’ என பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கேள்வி எழுப்பி உள்ளார். பாஜ தேசிய தலைவராக பொறுப்பேற்ற பிறகு ஜே.பி.நட்டா, முதல் முறையாக நேற்று குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவான பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசினார். உபி மாநிலம் ஆக்ராவில் நடந்த இக்கூட்டத்தில் அம்மாநில பாஜ முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஜே.பி.நட்டா பேசுகையில், ‘‘காங்கிரஸ் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் இழந்திருக்கிறது.

அதன் தலைமை, மனநல திவால் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால்தான், கடந்த 8 மாதமாக அவர்கள் வெளியிடும் அறிக்கை அனைத்தும் பாகிஸ்தானுக்கு உதவுவதைப் போலவே உள்ளன. குடியுரிமை சட்டம் பற்றி ராகுல் காந்தியால் தொடர்ந்து 10 வரி பேச முடியுமா? அப்படி பேசி விட்டால், அவர் சொல்வதை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். சிஏஏ சட்டத்தை பற்றி எதுவும் தெரியாத காங்கிரஸ் தலைவர்கள், மக்களை தவறாக வழி நடத்துகின்றனர். சிஏஏ சட்டம் குடியுரிமை வழங்குவதற்காக மட்டுமே கொண்டு வரப்பட்டது. மாறாக, யாருடைய குடியுரிமையும் இதனால் பறிக்கப்படாது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்,’’ என்றார்.

Related Stories: