டிரம்ப்பை கொன்றால் 21 கோடி பரிசு: ஈரான் சபாநாயகர் அறிவிப்பு

டெஹ்ரான்: ‘அமெரிக்க அதிபர் டிரம்பை கொல்பவர்களுக்கு 21 கோடி பரிசு வழங்கப்படும்,’ என்று ஈரானில் உள்ள மாகாண சட்டப்பேரவை சபாநாயகர் அகமது ஹம்சே அறிவித்துள்ளார். ஈரான் படைத் தளபதி சுலைமானியை சில நாட்களுக்கு முன் அமெரிக்கா ஆளில்லா குட்டி விமானம் மூலம் தாக்குதல் நடத்தி கொன்றது. இதற்கு பதிலடியாக, சுலைமானியின் சொந்த மாகாணமான கெர்மன் பகுதியை சேர்ந்த அரசியல்வாதி ஒருவர், சுலைமானியை கொன்ற அமெரிக்க அதிபர் டிரம்பை கொலை செய்ய சபதம் ஏற்றுள்ளார். மத்திய ெகர்மன் மாகாணத்தை சேர்ந்த சட்டப்பேரவை சபாநாயகரான அகமது ஹம்சே என்ற அவர் நேற்று எம்எல்ஏ.க்கள் மத்தியில் ேபசினார். அப்போது அவர், ‘‘சுலைமானியை டிரோன் தாக்குதல் நடத்தி கொலை செய்த டிரம்பை பழிவாங்க ஒவ்வொரு ஈரான் குடிமகனும் சபதம் ஏற்க வேண்டும். டிரம்பை கொலை செய்யும் நபருக்கு 21.35 கோடி பரிசு வழங்குவேன். நமது அப்பாவி மக்களை கொலை செய்யும் நபர்களை அடியோடு அழிக்க நினைப்பதில் என்ன தவறு உள்ளது?’’ என்றார்.

Advertising
Advertising

Related Stories: