அடுத்த மாதம் மத்திய பட்ஜெட் தாக்கல்: இரும்பு உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களுக்கான வரியை முற்றிலும் நீக்க ஃபிக்கி கோரிக்கை

டெல்லி: எதிர்வரும் பட்ஜெட்டில் இரும்பு உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களுக்கான வரியை முற்றிலுமாக குறைக்க வேண்டும் என இந்திய தொழில் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பான ஃபிக்கி கோரிக்கை விடுத்துள்ளது. இரும்பு உற்பத்திக்கு தேவைப்படும் நிலக்கரி, சுண்ணாம்பு உள்ளிட்ட தரமான மூலப்பொருட்கள் உள்நாட்டில் போதுமானதாக கிடைக்கவில்லை என்றும் அதனால், அத்தகைய மூலப்பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளதாக ஃபிக்கி தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

ஆனால், இரும்பு உற்பத்திக்கு தேவையான கோக்கின் நிலக்கரி, அந்திரசைட் நிலக்கரி, சுண்ணாம்பு உள்ளிட்ட மூலப்பொருட்களுக்கு தற்போது 2.5 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதம் வரை இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. எதிர்வரும் பட்ஜெட்டில் இரும்பு உற்பத்தித்துறைக்கு தேவையான மூலப்பொருட்களுக்கான வரியை முற்றிலுமாக நீக்க ஃபிக்கி கோரிக்கை விடுத்துள்ளது.

Related Stories: