ஆயுதங்களை கைவிட சம்மதம் போடோ தீவிரவாத அமைப்பு அரசுடன் அமைதி ஒப்பந்தம்

புதுடெல்லி: அசாமில் போடாலேண்ட் தனி மாநிலம் கோரி, ‘தேசிய ஜனநாயக போடோலேண்ட் முன்னணி’ (என்டிஎப்பி) என்ற தீவிரவாத அமைப்பு கடந்த 50 ஆண்டுகளாக தீவிரமாக போராடி வருகிறது. தடை செய்யப்பட்ட இந்த அமைப்பு நடத்திய பல்வேறு போராட்டம், வன்முறையில் ஏராளமானவர்கள் பலியாகி உள்ளனர். இந்த அமைப்பு மற்ற தீவிரவாத அமைப்புகளான உல்பா, என்எஸ்சிஎன்கே ஆகியவற்றுடன் இணைந்து, ‘ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி’ என்ற அமைப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், என்டிஎப்பி அமைப்புடன் மத்திய, அசாம் மாநில அரசுகளின் அதிகாரிகள் பங்கேற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் இந்த அமைப்பு ஆயுதங்களை கைவிட ஒப்புக் கொண்டு, ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘என்டிஎப்பி அமைப்பின் முக்கிய உறுப்பினராக செயல்பட்ட சரோய்க்வாரா, இந்த பேச்சுவார்த்தைக்காக கடந்த 11ம் தேதி மியான்மரில் இருந்து அழைத்து வரப்பட்டார். இந்த குழுவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது.’’ என்றனர்.

Related Stories: