அனைத்து விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வது தொடர்பான வழக்கு விசாரணையை வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைப்பு

டெல்லி : அனைத்து விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வது தொடர்பான வழக்கு விசாரணையை வரும் 24ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. தமிழகத்தில் உள்ள வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளில் 5 ஏக்கருக்கு மேல் நிலம் உள்ள விவசாயிகள் கடனையும் தள்ளுபடி செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டு இருந்தது. ஐகோர்ட் உத்தரவை மீறி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. வாதங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய நீதிபதிகள் பானுமதி, பொப்பண்ணா அமர்வு உத்தரவிட்டுள்ளது.கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய அரசு அவகாசம் கோரியத்தை ஏற்று வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

Advertising
Advertising

Related Stories: