தொடர்ந்து 29வது ஆண்டாக இந்தியாவுடன் பாகிஸ்தான் அணுசக்தி பட்டியல் பகிர்வு

புதுடெல்லி: இந்தியாவும், பாகிஸ்தானும் தங்களிடம் உள்ள அணுசக்தி நிலையங்களின் பட்டியல்களை, தொடர்ச்சியான 29வது ஆண்டாக நேற்று பரஸ்பரம் பகிர்ந்து கொண்டன. இந்தியாவும் பாகிஸ்தானும் போர் ஏற்பட்டால் கூட, அணுசக்தி நிலையங்களை தாக்குதல் இலக்காக குறி வைக்கப்படக் கூடாது என்று கருதின. அதன் அடிப்படையில், கடந்த 1988ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி இருநாடுகளும் ஒப்பந்தம் செய்து ண்டன. ஆனால், இந்த ஒப்பந்தமானது கடந்த 1991ம் ஆண்டு முதல்தான் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 1992ம் ஆண்டு ஐனவரி 1ம் தேதியன்று, முதல் முறையாக இருநாடுகளும் தங்களது அணுசக்தி நிலையங்களின் பட்டியலை பரஸ்பரம் பகிர்ந்து கொண்டன. அது முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1ம் தேதி இந்த பட்டியலை இருநாடுகளும் பரஸ்பரம் பகிர்வது வழக்கமான நடைமுறையானது.

இந்நிலையில், 2020 ஆங்கிலப் புத்தாண்டு தினமான நேற்று, இருநாடுகளும் தங்களின் அணுசக்தி நிலையங்கள் பட்டியலை பரஸ்பரம் பகிர்ந்து கொண்டன டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரியிடமும், இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரியிடமும் நேற்று இவை முறைப்படி சமர்ப்பிக்கப்பட்டன. இருநாடுகள் இடையே பல்வேறு கட்டங்களில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையிலும், இந்த பட்டியலை பகிர்ந்து கொள்வதை மட்டும் இருநாடுகளும் தொடர்ந்து பின்பற்றி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: