ஆளுநர் மீது பாலியல் புகார் எதிரொலி; ராஜ்பவனுக்குள் போலீஸ் நுழைய தடை: மேற்குவங்கத்தில் பரபரப்பு

கொல்கத்தா: மேற்குவங்க ஆளுநர் மீது பாலியல் புகார் எழுந்துள்ள நிலையில், ராஜ்பவனுக்குள் மாநில போலீஸ் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்குவங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ், கொல்கத்தாவில் உள்ள ராஜ்பவனில் பணியாற்றும் ஒப்பந்த பெண் பணியாளருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது. இவ்விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில், மேற்குவங்க போலீசார் ஆளுநருக்கு எதிராக புகாரை பதிவு செய்துள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு மத்தியில் ஆளுநருக்கு எதிரான பாலியல் புகாரானது பூதாகரமாகி உள்ளது. மேற்குவங்க காவல் துறையும், ஆளுநர் மாளிகையில் பணியாற்றும் மற்ற பெண்களிடம் விசாரணை நடத்த முயன்றுள்ளது. இதற்கிடைய மாநில போலீசாரின் விசாரணையை தடுக்கும் வகையில், ஆளுநர் மாளிகைக்குள் மாநில போலீசார் மற்றும் மாநில நிதியமைச்சர் சந்திரிமாயிட்ச் ஆகியோர் நுழைய தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆளுநர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது குறித்து மாநில போலீசார் விசாரிக்க திட்டமிருந்த நிலையில், ராஜ்பவனுக்குள் மாநில போலீஸ் நுழைய தடை விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

The post ஆளுநர் மீது பாலியல் புகார் எதிரொலி; ராஜ்பவனுக்குள் போலீஸ் நுழைய தடை: மேற்குவங்கத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: