பொள்ளாச்சியில் 10 ஆண்டுகளாக கிளினிக் நடத்திய போலி சித்த மருத்துவர் கைது; சிறையில் அடைப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் கடந்த 10 ஆண்டுகளாக சித்த மருத்துவ கிளினிக் நடத்தி, பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பொள்ளாச்சியில் மகாலிங்கபுரத்தில் உள்ள எல்ஐஜி காலனியில் வசித்து வந்தவர் மாரிமுத்து(60). இவர் குடியிருக்கும் தனது வீட்டின் ஒரு பகுதியிலேயே, கடந்த 10 ஆண்டுகளாக சித்த மருத்துவத்திற்கு சிகிச்சை அளிக்கும் கிளினிக் நடத்தி, பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். ஆனால் அவர் சித்த மருத்தவருக்கான படிப்பை படிக்காமல், அங்கு வரும் நோயாளிகளுக்கு  சிகிச்சை அளித்து வருவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து நேற்று, கோவை மாவட்ட சித்த மருத்துவ துணை இயக்குனர் தனம் தலைமையில், தாசில்தார் தணிகைவேல் மற்றும் அரசு  மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜா உள்ளிட்டோர் மாரிமுத்துவின் கிளினிக்கில் ஆய்வு மேற்கொண்டனர். மாரிமுத்து சித்த வைத்தியம் படித்ததற்கான எந்தவித ஆவணம் இல்லாததும்,  நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தது தெரியவந்தது. பின்னர் அவருடைய அலுவலகத்தில் இருந்த சித்த மருத்துவ சிகிச்சைக்கான மருத்து, மாத்திரைகளை பறிமுதல் செய்து, கிளினிக்கிற்கு சீல் வைத்தனர். அவர் மீது மகாலிங்கபுரம் போலீசில் புகார் தெரிவித்தனர். அதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிந்து மாரிமுத்துவை இன்று காலையில் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories: