மகாராஷ்டிராவில் கல்வியின் தரத்தை உயர்த்த முயற்சி எடுத்தோமா: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கேள்வி

மும்பை: கல்வியின் தரத்தை உயர்த்த முயற்சி எடுத்தோமா என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கேள்வி எழுப்பியுள்ளார். மகாராஷ்டிராவில் இரண்டு பள்ளிகளின் பெயர் மாற்ற விழாவில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கலந்துகொண்டார். விழாவில் கலந்துகொண்டு சரத்பவார் கூறுகையில், கல்வித் துறையில் நாட்டுக்கே முன்னோடியாக மகாராஷ்டிரா திகழ்ந்து வருகிறது.

ஏராளமான கல்வி நிறுவனங்களுக்கு சிறப்பு விருந்தினராகச் சென்றிருக்கிறேன் மற்றும் விழாக்களுக்குத் தலைமை வகித்திருக்கிறேன். மாநிலம் முழுவதும் கல்வியை விரிவுபடுத்த முயற்சிகள் எடுத்து அதைச் சாத்தியமாக்கியுள்ளோம். ஆனால் கல்வித் தரத்தை அதிகப்படுத்த எவ்வித முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை. கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டிய சவால் உங்கள் அனைவரின் முன்னாலும் உள்ளது. வாழ்க்கையில் தாங்கள் சந்திக்கும் கடினமான தருணங்களை எதிர்கொள்ளும் பக்குவம் மாணவர்களுக்குத் தேவை. இதைக் குழந்தைப் பருவத்தில் இருந்தே வளர்த்தெடுக்க வேண்டும் என சரத்பவார் கூறினார்.

இவை அனைத்திலும் ஓர் ஆசிரியரின் பங்கு மிகவும் முக்கியமானதாக்கும். இப்போதெல்லாம் 100 சதவீதத் தேர்ச்சி என்பது சாதாரணமாகிவிட்டது. பொதுத் தேர்வுகளில் 92%, 94% என தேர்ச்சி முடிவுகள் வெளியாகின்றன. 90, 92, 95% என மாணவர்கள் மதிப்பெண்களைப் பெற்று வருகின்றனர். இத்தகைய உயர் மதிப்பெண்களைப் பெறும் மாணவர்களைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் மதிப்பெண்களை வழங்கும் முறை இன்னும் மாறவில்லை. இதில் மாற்றம் வர வேண்டும் மற்றும் கல்வித் தரம் உயர வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.

Related Stories: