உள்ளாட்சி தேர்தல் 7 மாவட்டத்திற்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சென்னை : உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் 7 மாவட்டதிற்கான அதிமுக வேட்பாளர்களின் பட்டியலை ஓபிஎஸ், ஈபிஎஸ் வெளியிட்டுள்ளனர். தமிழகத்தில், உள்ளாட்சி தேர்தல் வரும் 27 மற்றும் 30ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்தநிலையில் அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தங்களது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.

Advertising
Advertising

அதில், தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு தேனி, சேலம், கிருஷ்ணகிரி, அரியலூர், திருவாரூர், மதுரை புறநகர் கிழக்கு, தூத்துக்குடி வடக்கு மாவட்டங்களுக்கு, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு வேட்பாளர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் உள்ளவர்கள் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக நிறுத்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: