உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு; துறைத் தேர்வுகள் ஒத்திவைப்பு : அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

சென்னை: உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால், துறைத்தேர்வுகள் மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறவிருப்பதை முன்னிட்டு வரும் 22ம்தேதி முதல் 30ம்தேதி வரை நடைபெற இருந்த துறைத் தேர்வுகள் மட்டும் ஒத்திவைக்கப்பட்டு, ஜனவரி 5ம்தேதி முதல் 12ம்தேதி வரை நடைபெறும்.

மற்றபடி தொகுதி - 1ல் அடங்கிய பதவிகளுக்கான நேர்காணல் தேர்வு திட்டமிட்டபடி வரும் 23ம்தேதி முதல் 31ம்தேதி வரை (25.12.2019 மற்றும் 29.12.2019 நீங்கலாக) தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும்.  மேலும் திட்ட அலுவலர், உளவியலாளர் மற்றும் சிறை அலுவலர் ஆகிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்வுகளும் திட்டமிட்டபடி வரும் 21ம்தேதி மற்றும் 22ம்தேதி ஆகிய இருநாட்களில் நடைபெறும்.

Related Stories: