வெங்காயம், பெட்ரோல் விலை உயர்வு: பாஜ அரசு தூக்கத்தில் உள்ளது: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி: ``வெங்காயம், பெட்ரோல் விலை கிடுகிடு என உயர்ந்து வரும் நிலையில் பாஜ அரசு ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கிறது’’ என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.   வெங்காயம், பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் சமையலில் வெங்காயத்தை பார்ப்பதே அரிதாகி விட்டது. இந்த நிலையில் விலைவாசியை கட்டுப்படுத்த தவறி விட்டதாக மத்தியில் ஆளும் பாஜ அரசை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெங்காயம் விலை கிலோ ரூ.200க்கு விற்கப்படுகிறது. இதேபோல் பெட்ரோல் விலையும் லிட்டர் ரூ.75 ஆக உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்வால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில் பாஜ அரசு தூக்கத்தில் ஆழ்ந்துள்ளது.  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் விலை வாசி உயர்வுக்காக காங்கிரசும் மத்திய அரசை குற்றம்சாட்டியுள்ளது.

Related Stories: